2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பாடசாலையின் கணினி அறையில் திருட்டு

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராண்குளத்தில்  பாடசாலையொன்றின் கதவு உடைக்கப்பட்டு பெறுமதிவாய்ந்த பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் திங்கட்கிழமை (10) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையின் கணினி அறை உடைக்கப்பட்டு அதில் இருந்த பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இந்த துணிகர கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .