2025 மே 02, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகர சபையின் எல்லை மீறிய செயற்பாடுகள் குறித்து விசேட பேச்சு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகர சபையின் செயற்பாடுகள் குறித்து ஆரையம்பதி பிரதேச சபைச் செயலாளர் திருமதி அருள் பிரகாசத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துரையாடியுள்ளது.

இன்று புதன்கிழமை நடைபெற்ற இச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.கருணாகரம் (ஜனா), கே.துரைராஜசிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, எம்.நடராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது, மண்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபை எல்லைக்குள் காத்தான்குடி நகர சபையினரால் கடை வாடகை அறவீடு செய்தல், ஒருதொகுதி வீடுகளையும் காணிகளையும் நிருவகித்தல், காத்தான்குடி நகர சபை அத்துமீறி பிரவேசித்து நிருவாகித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்றமை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் கேட்கப்பட்டதுடன் இன்னும் பல விடயங்கள் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது காத்தான்குடி நகர சபையின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து அதன் தவிசாளருக்கு கடிதம் மூலம் அறிவித்து, அதற்கான விளக்கங்கள் கோரப்பட்ட போதும் எந்தவிதமான பதிலும் இல்லை என பிரதேச சபைச் செயலாளர் தொடர்ந்தும் நவடிக்கைகள் மெற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததாக மாகாண சபை உறுப்பினர் கே.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .