2025 மே 02, வெள்ளிக்கிழமை

காணாமல்போன முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட நடவடிக்கை

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போன முஸ்லிம்களின் விபரங்களை காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு குருக்கள் மடத்தில் வைத்து காணாமல் போன காத்தான்குடியைச் சேர்ந்த அறுபதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி வாழைச்சேனை, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து காணாமல் போனோரின் விபரங்களை காணாமல் போனோரை விசாரணை
செய்யும் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி பிரதேசங்களில் இருந்து காணாமல் போனோர் பற்றிய விபரங்களை அவர்களின் உறவினர்கள் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு நேரடியாக அனுப்பி வைக்கமுடியும்.

நேரடியாக அந்த விபரங்களை அனுப்பமுடியாதவர்கள் தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .