2025 மே 01, வியாழக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள  மாணவர்கள் 65 பேருக்கு கற்றல்  உபகரணங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி குபா இளைஞர் கழகத்தின் சமூக வேலைத்திட்டத்தின் கீழ், மேற்படி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதன்போது ஒவ்வொரு  மாணவனுக்கும்  850 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் குபா இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் நாடாளுமன்றத்தின்  காத்தான்குடி பிரதிநிதியுமான எம்.சுஜாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக்,  காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எம்.எஸ்.சியாத், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஐ.சுபைர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .