2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு மட்.செட்டிபாளையம் பொது நூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் விவாதப் போட்டியும் பரிசழிப்பு விழாவும் புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மட்.செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தின் விபுலானந்த மண்டபத்தில நடைபெற்றது.

இதன்போது வாசகர் வட்டத்தினால் தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் தெரிவு செய்யபட்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கபட்டதோடு மாணவர்களின் விவாதப் போட்டியும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) 30 ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்களை  நூலகத்திற்கு அன்பழிப்புச் செய்தார்.

வாசகர் வட்டத்தின் தலைவர் ஏ.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா), கிழக்கு மாகாண சுகாரா மற்றும் சமூக சேவைகள் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் கலாநிதி சி.அமலநாதன், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மா.உதயகுமாரின்; சேவையினைப் பாராட்டி வாசகர் வட்டத்தினரால் வாழ்த்துப்பா வழங்கி கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .