2025 மே 01, வியாழக்கிழமை

பாம்பு தீண்டி விவசாயி வைத்தியசாலையில்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது நாகபாம்பு தீண்டிய விவசாயி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெருகல் சந்தலிவெளியிலுள்ள வயலிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி விவசாயியை பாம்பு தீண்டியுள்ளது.

ஈச்சிலம்பற்று, சின்னக்குளம் வாசியான 44 வயதுடைய வை.ஜெகநாதன் என்பவரையே நாகபாம்பு தீண்டியுள்ளது.

உடனடியாக வெருகல் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வெருகல் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .