2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பசுமாட்டைச் சுட்டவரை தேடி வலைவீச்சு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 18 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  முந்தன்குமாரவெளி பகுதியில் பசுமாடு ஒன்றை கட்டுத் துப்பாக்கியினால் சுட்ட சந்தேக நபரைத் தாம் தேடி வருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டுத் துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் தனது பசுமாட்டை சுட்டுள்ளதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் மாட்டின் உரிமையாளர்   தெரிவித்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் சந்தேக நபரைத் தேடிவருவதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .