2025 மே 01, வியாழக்கிழமை

லூர்து மாதாவின் திருச்சொரூபம் திறப்பு

Super User   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரீ.எல். ஜௌபர்கான்


மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியிலுள்ள நாவற்குடாவில் லூர்த்து மாதாவின் திருச்சொரூபம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு திறந்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி பொன்னையா ஜோசப்பினால் ஆசீர்வதிக்கப்பட்ட பின்னரே இந்த சொரூபம்  திறந்துவைக்கப்பட்டது.

நாவற்குடா சின்ன லூர்த்து மாதா ஆலயத்தின் பங்குத் தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் அருட் தந்தையர்கள் உட்பட பெரும் எண்ணக்கையிலான கத்தோலிக்க பக்தர்கள் பங்குகொண்டனர்.

இதன்போது சிலுவை பாதை பவனி இடம்பெற்றதுடன் மறை மாவட்ட ஆயரினால் திருப்பலி பூஜையும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .