2025 ஜூலை 30, புதன்கிழமை

மட்டக்களப்பில் திரட்டப்பட்ட காணாமல் போனோரின் விபரங்கள் ஜனாதிபதியிடம் சமர்பிப்பு

Kogilavani   / 2013 டிசெம்பர் 27 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

யுத்தக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து காணாமல்போன மற்றும் கடத்தப்பட்ட 350 பேரின் விபரங்கள் ஜனாதிபதி ஆணைகுழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை, யுத்த அனர்த்தத்தினால் இறந்து மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியம் சமர்பித்துள்ளதாக ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் வி.மகேஸ்வரன் தெரிவித்தார்.

யுத்த அனர்த்தத்தினால் இறந்து மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களின் ஒன்றியத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இதன் பிரதிகள் ஜனாதிபதி செயலகத்திற்கும் பிரித்தானிய தூதுவராலயத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .