2025 ஜூலை 30, புதன்கிழமை

சிகரம் கிராம பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணி, தற்காலிக வீடு சேதம்

Menaka Mookandi   / 2014 ஜனவரி 01 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


ஆரையம்பதி, சிகரம் கிராமத்திலுள்ள பள்ளிவாயல்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணியின் சுற்றுவேலி மற்றும் தற்காலிக வீடு என்பன இன்று (01)அதிகாலை சேதப்படுத்தப்பட்டுள்ளது.

மேற்படி கிராமத்தில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு சொந்தமான காணிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சிலர் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருந்த தற்காலிக வீடு மற்றும் அந்த காணியின் சுற்றுவேலி என்பவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதன் போது அங்கு தங்கியிருந்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் அங்கு விரைந்து நிலைமைகளை பார்வையிட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், சேதப்படுத்தப்பட்ட பகுதியினை பார்வையிட்டதுடன் சிகரம் கிராம மக்களுடனும் கலந்துரையாடினார். இது தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கையினை எடுக்குமாறு பொலிசாருடன் பேசியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .