2025 ஜூலை 30, புதன்கிழமை

மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 01 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சமுர்த்திப் பயனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு  அப்பியாசக் கொப்பிகள் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தினால், புத்தாண்டு விழாவையொட்டி இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்ணம், சமுர்த்தி முகாமையாளர்களான இ.குணரட்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது 275 மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.  மாணவர் ஒருவருக்கு  500 ரூபா பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.

2014ஆம் ஆண்டு புத்தாண்டை மட்டக்களப்பு மாவட்டத்தில்  களியாட்டங்களிலும் வீண்விரயங்களிலும் கழிக்காமல் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவுவோம் எனும் மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கும் திட்டத்திற்கு அமையவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .