2025 மே 01, வியாழக்கிழமை

கடற் படையினருக்கு கிழக்கு பல்கலையில் முகாமைத்துவப் பயிற்சி நெறி

Super User   / 2014 ஜனவரி 19 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


கடற் படையினருக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பயிற்சி நெறி வழங்குவது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இன்று ஞாயிறுக்கிழமை வந்தாறுமூலையிலுள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கிழக்கு பல்கலைக்கழகம் சார்பில் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜாவும் கடற் படை சார்பில் அதன் பயிற்சிப் பிரிவு பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் எம்.யூ.கே.வி. பண்டார ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் படி திருகோணமலையிலுள்ள கடற் படை தளத்தில் நடத்தப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கு  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள் வழங்கப்படவுள்ளது.

அடுத்த இரண்டு வருடங்களுக்கு செயற்படுத்தத்தக்கதாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள போதிலும் இருதரப்பு உடன்படிக்கைக்கு அமைவாக நீண்ட கால செயற்பாட்டிற்கும் இந்த ஒப்பந்தம் வழிகோலுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடற் படையினரின் பதவியுயர்விற்கு துணைபுரியும் இதுபோன்ற பயிற்சி நெறிகள் கடந்த காலங்களில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .