2025 மே 01, வியாழக்கிழமை

கூரையிலிருந்து வீழ்ந்த கைக்குண்டு மீட்பு

Kanagaraj   / 2014 ஜனவரி 19 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு, திருமலை வீதியிலுள்ள சிகரம் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் தே.ஜெயராஜனின் வீட்டு சிவிங்க்குள்ளிருந்து (அண்டசீற்) இன்று ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்த கைக்குண்டை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வீட்டில் திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வீட்டின் அண்டசீற் கழற்றப்பட்ட போதே உள்ளே இருந்து கைக்குண்டு வீழ்ந்துள்ளது.

வீட்டு உரிமையாளர் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்று  விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர்  நீதிமன்ற அனுமதியினை அடுத்து கைக்குண்டைமீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் தற்போதைய உரிமையாளர் இந்த வீட்டை 2012 ஆம் ஆண்டே கொள்வனவு செய்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக தெரிவித்த பொலிஸார் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .