2025 மே 01, வியாழக்கிழமை

வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா இடமாற்றம்

Kogilavani   / 2014 ஜனவரி 21 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மையமாகக்கொண்டு முறைசாரா கல்வி நிலையமாக மட்டக்களப்பு, இல:1A, இயேசு சபை வீதியில் கடந்த 17 வருடங்களாக இயங்கிவந்த வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா மட்டக்களப்பு மன்றேசா வீதியிலுள்ள தனது புதிய  இடத்துக்கு நேற்று திங்கட்கிழமை இடமாற்றப்பட்டுள்ளது.

இந்த கல்வி நிலையமானது ஆறுவயது முதல் பதினாறு வயது வரையான மூவினத்தையும் சேர்ந்த சிறார்களை பாடசாலை ரீதியில் பூங்காவுக்கு அழைத்து வந்து நுண்கலைகளினூடாக கல்வியறிவையும் உறவு முறைகளையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்தி, கல்வியிலும் வாழ்க்கை முறையிலும் அவர்களை முன்னேற்றி விட முயற்சி எடுக்கின்றது.

இந்த கல்வி நிலையத்துடன் 065-3063851 என்ற தற்காலிக தொலைபேசி இலக்கத்துடன் அல்லது www.butteflypeacegarden.org என்ற இணையத்தள முகவரியுடன் தொடர்பு கொள்ளலாம் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .