2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புதையல் தோண்டிய நால்வர் கைது

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

வாக்கரை, கிருமிச்சை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் நால்வரை நேற்று சனிக்கிழமை மாலை கைது செய்ததாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நால்வரும் சேருவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்களிடமிருந்து புதையல் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கல் உடைக்கும் அளவாங்கு போன்றவைகளை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேகநபர்களை நாளை திங்கட்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X