2025 மே 03, சனிக்கிழமை

சேமிப்பு நிறுவனத்திற்கு எதிராக முறைப்பாடுகள்

Super User   / 2014 பெப்ரவரி 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'ஜெயதீபம் முதலீட்டு நிறுவனம்' என்ற பெயரில் மட்டக்களப்பு மத்திய வீதியில இயங்கி வந்த சேமிப்பு நிறுவனத்திற்கு எதிராக சுமார் 15 முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மட்டக்களப்பு பிரதான பொலிஸ்  நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தில் முதலீட்டு மேற்கொண்டவர்களினாலேயே இந்த முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸார்
இந்த முதலீட்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தங்களது கிராமத்திற்கு வந்து நிறுவனத்தில் மாதா மாதம் சேமிப்புச் செய்யும் பொழுது பயனாளிகளுக்கு வாழ்வாதார தொழிலுக்கான பெருந்தொகை பணம் கடனாக தரப்படும் என்று வாக்குறதியளித்தனர் என குறித்த நிறுவனத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனால் சேமித்த பணத்தினை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். எனினும் உத்தரவாதம் அளித்தபடி குறித்த முதலீட்டு நிறுவனம் தங்களுக்கு பெருந்தொகைப் பணம் கடனாகத் தரவுமில்லை, தங்களது சேமிப்புக்கு வட்டியும் தரவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

குறைந்த பட்சம் தங்களது சேமிப்புப் பணத்தைக் கூட திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாகப் பொலிஸில் புகார் தெரிவித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.முதலீட்டுக் காலக்கெடு முடிவடைந்த நிலையில் தமது சேமிப்புப் பணத்தையாவது மீளப்பெற்றுக் கொள்ளலாம் என குறித்த நிறுவனத்திற்குச் சென்ற சேமிப்பாளர்களுக்கு அங்கு அலுவலர்கள் எவருமில்லாத நிலையில் நிறுவனம் பூட்டப்பட்டுக்கிடந்த என்றனர்.

இது விடயமாகப் பாதிக்கப்பட்ட பலர் மட்டக்களப்புப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து குறித்த நிறுவனத்தில் கடமையாற்றி தலைமறைவாகியுள்ளவர்கள் தொடர்பான விசாரணையைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிறுவனத்தில் பணம் சேமிப்புச் செய்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளவர்களை பெப்ரவரி 18ஆம் திகதி சமுகமளிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 4,500 பேர் வரை இந்த நிறுவனத்தின் நிதி மோசடியில் சிக்கியிருக்கலாம் என தான் நம்புவதாகவும் இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களது சேமிப்புப் பணம் கோடி ரூபாய்களாக இருக்கலாம் என்றும் இந்த நிறுவனத்தில் சிறுது காலம் பணியாற்றி அந்த நிறுவனத்தில் பணத்தைச் சேமிப்புச் செய்து  ஏமாற்றப்பட்ட ஒரு பெண்மணி தெரிவித்தார்.

தான் சேமிப்புச் செய்த 518,150 ரூபாவை குறித்த நிறுவனம் தனக்குத் திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக தங்கத்துரை தயாளினி என்ற இன்னொருவர் தெரிவித்தார். இந்தப் பணத்தை தனது திருமண செலவுக்காக தான் சிறுகச் சிறுகச் சேமித்து வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X