2025 மே 03, சனிக்கிழமை

மட்டக்களப்பில் இராணுவத்தில் தமிழ் பெண்களை இணைக்கும் நடவடிக்கை

Kogilavani   / 2014 பெப்ரவரி 19 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேவஅச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்துக்கு தமிழ் யுவதிகளை இணைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை (18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட இராணுவ சிவில் படைப்பிரிவு தெரிவித்தது.

இது தொடர்பிலான நிகழ்வு மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது.

இராணுவத்தில், 18 வயது முதல் 24 வயது வரையான யுவதிகள் தங்களை இணைத்துக்கொள்ளமுடியும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் படை இணைப்பதிகாரி மேஜர் ஹெட்டிக்கொல படை முகாம்களின் அலுவலகங்களில் இவர்களுக்கு கடமைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இப்பதிவு நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டிப்பதாகவும் இராணுவத்தில் இணைய விரும்பும் யுவதிகள்; தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் தங்களை பதிவுசெய்துகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X