2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கொரியா பயணமாகவுள்ளார்

Kogilavani   / 2014 பெப்ரவரி 20 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொரியா நாட்டில் நடைபெறவுள்ள மலக்கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பிலான மாநாட்டில் கலந்து கொல்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் கொரியா பயணமாகவுள்ளார்.

இந்த மாநாடு ஜெய்க்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24.2.2014 தொடக்கம் 1.3.2014ஆம் திகதி வரை ஆறு தினங்கள் கொரியாவில் நடை பெறவுள்ளதாக காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சனிக்கிழமை(22) இவர் இங்கிருந்து கொரியா செல்லவுள்ளார்.

காத்தான்குடி நகரசபை பிரிவில் மலக்கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X