2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உலக ஈரநில தினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 24 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


வேள்ட்விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் பட்டிப்பளைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் உலக ஈரநில தினம் இன்று திங்கட்கிழமை (24) அனுஷ்டிக்கப்பட்டது.

'ஈரநிலங்களும் விவசாயமும், வளர்ச்சிக்கான பங்காளிகள்' எனும் இவ் வருட தொனிப்பொருளின் கீழ் இந்நிகழ்வு நடைபெற்றது.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம்   தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் சபையின் நிலைய பொறுப்பாளர் கோகுலன், பட்டிப்பளை பிராந்திய அபிவிருத்தி திட்ட முகாமையாளர், ஜி.ஜே.அனுராஜ், பட்டிப்பளை பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் ந.தயாசீலன் மற்றும் பட்டிப்பளை பிரதேச பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கிராம உத்தியோகத்தர்கள், குடியேற்ற உத்தியோகத்தற்கள், பிரதேச காணி பிரிவு உத்தியோகத்தர்கள், வேள்ட்விஷன் நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது  பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் அமைந்துள் தாழ் நிலங்களில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டதோடு கண்டல் தாவரங்களை பாதுகாப்பது தொடர்பாக விளக்கங்களும் வழங்கப்பட்டன.

உலக ஈரநில தினம் தொடர்பான இஸடிக்கர்களும், 'ஈரநிலங்களும் விவசாயமும், வளர்ச்சிக்கான பங்காளிகள்' எனும் வாசகம் பொறிக்கப்பட்ட தொப்பிகளும் மாவணர்களுக்கு இதன்போது அணிவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X