2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 25 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கடலில்  செவ்வாய்க்கிழமை (25)   தவறி விழுந்து  செம்மண்னோடைக் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மது தாஹிர் இஸ்மாயில் (வயது 34) என்பவர் உயிரிழந்ததாக  வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்றொழிலில் ஈடுபடும் இவர், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காக சனிக்கிழமை (22) சென்று திங்கட்கிழமை  (24) கரையை அடைந்தார். இந்நிலையில், துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட படகிலிருந்து  வலைகளை   சிக்கெடுத்துக்கொண்டிருந்தபோது   அப்படகிலிருந்து இவர் தவறி விழுந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் 03 பிள்ளைகளின் தந்தை ஆவார்.

இது   தொடர்பான விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X