2025 மே 03, சனிக்கிழமை

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டுக்கான மண்டப அனுமதி ரத்து

Menaka Mookandi   / 2014 மார்ச் 01 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு நடை பெறவிருந்த காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தின் அனுமதியை காத்தான்குடி நகரசபை ரத்துச் செய்துள்ளது.

மண்டப அனுமதியை இரத்துச் செய்வதாக காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு நேற்று (28) எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

நாளை (2)ஞாயிற்றுக்கிழமை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டை நடத்துவதற்காக காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தை மேற்படி இயக்கம் அனுமதி பெற்றிருந்தது.

மாநாட்டுக்கான அழைப்புக்கள் விநியோகிக்கப்பட்டு முடிந்துள்ள நிலையில் ஹிஸ்புல்லா மண்டபத்தில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாட்டை நடத்த முடியாது என மண்டபத்தின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி நகரசபையின் பிரதி தலைவர் எம்.ஐ.எம்.ஜெஸீமிடம் கேட்டபோது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அதன் தேசிய மாநாடு எனக் கூறி அனுமதியை பெறவில்லை ஒரு கருத்தரங்கு என்றுதான் அனுமதி பெற்றிருந்தார்கள் என்றார்.

அத்தோடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேசிய மாநாடு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து துண்டுப்பிரசுரங்கள் வெளியானதுடன் மாநாட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாகவும் இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதன் மூலம் நகரசபை சொத்துக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும். அந்த சேதத்தை நகரசபையே பொறுப்பேற்க வேண்டும் என தொலைபேசியில் சிலர் என்னிடம் தெரிவித்துள்ளதால் இவைகளை கருத்திற்கொண்டு அனுமதியை ரத்துச் செய்தோம் என்றார்.

இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா (ஆலோசனை) சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மானிடம் கேட்ட போது மண்டப அனுமதி ரத்துச் செய்யப்பட்டு நகரசபையினால் கடிதம் எமக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் திட்டமிட்டபடி எமது தேசிய மாநாடு நடைபெறுமென அவர் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X