2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விஷ ஜந்து தீண்டியதில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 02 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

ஒரு வகையான விஷஜந்து தீண்டியதாகச் சந்தேகிக்கப்படும்  மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கப்போடி ஞானமுத்து (வயது 50) என்பவர் மரணமடைந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஞாயிற்றுக்கிழமை (02)  காலை கொண்டுவந்தபோது இவர்  மரணமடைந்து காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாலையடி, வட்டையிலுள்ள வயலில் சனிக்கிழமை (01) இரவு  யானைக் காவலில் ஈடுபட்டிருந்த  இவரை பாம்பு கடித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனையின் பின்னரே இவர் பாம்புக் கடிக்குள்ளானாரா என்பது தொடர்பில் தெரியவருமெனவும் அவர் கூறினார்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழூர்; 110 பி கிராமத்தில்  பாம்பு கடித்து யாழ். பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவியான கங்காதரன் மாதுமி (வயது 22) என்பவர் வியாழக்கிழமை (27) அதிகாலை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X