2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை ஹிஸ்புல்லாஹ் பார்வை

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


நூறு மில்லியன் ரூபா செலவில் நவீனமயப்படுத்தப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை  பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் திங்கட்கிழமை (03) பார்வையிட்டார்.

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், அல்ஹிறா வித்தியாலய அபிருத்திச்சங்க செயலாளரும் சமூக சேவகருமான எம்.ஐ.எம் றசீட் உள்ளிட்டோரும் பங்குபற்றினர்.

காத்தான்குடி ஆற்றங்கரை வீதி மஞ்சந்தொடுவாய்வரை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதுடன், விளையாட்டு மைதானம், மேயருக்கான விடுதி வசதி, பெண்களுக்கான கூட்ட மண்டபம், வாராந்தச் சந்தை, பூங்காக்கள்,  சிறுவர்களுக்கான நீச்சல் தடாகங்கள், பொழுதுபோக்குச் சாதனங்கள், மீனவர்களுக்கு மீன்பிடி வசதிகளுடன் தங்குமிடங்கள் உள்ளிட்டவற்றை கொண்டதாக இப்பகுதி நவீனமயப்படுத்தப்படவுள்ளதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இது காத்தான்குடி மக்களுக்கு கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதமாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X