2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மருமகள் படுகொலை; மாமன் கைது

Suganthini Ratnam   / 2014 மார்ச் 04 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த 06 மாதங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட இளம் பெண்ணொருவர், உறுகாமம் கித்துள் காட்டுப்பகுதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை வாகனேரிப் பகுதியில் திங்கட்கிழமை (03) கைதுசெய்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கொம்மாதுறை கிராமத்தைச் சேர்ந்த சுதாசங்கர் ஜனனி (வயது 18) என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.  இவரது தாயார் மத்திய கிழக்கில் பணிப்பெண்ணாகச் சென்றிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மாமன் முறையானவரையே கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X