2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

துரிசியிலிருந்து விழுந்தவர் மரணம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 05 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிரான் பிரதேசத்தைச் சேர்ந்த சிவலிங்கம் செல்வராசா (வயது 32) என்பவர் துரிசியிலிருந்து சறுக்கி விழுந்து செவ்வாய்க்கிழமை (04) மரணமடைந்ததாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் துரிசியிலிருந்து சறுக்கி முறுத்தானை ஆற்றில் விழுந்து  நீரில் மூழ்கியதாகவும் பொலிஸார் கூறினர்.

03 பிள்ளைகளின் தந்தையான இவர் வயல் காவலுக்குச்; சென்றுவிட்டு,  சைக்கிளை தோளில் சுமந்துகொண்டு  துரிசியின் மீது ஏறி நடந்து வந்துகொண்டிருந்தபோதே  இந்த அனர்த்தத்திற்குள்ளானதாகவும் பொலிஸார் கூறினர்.  

சடலம் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X