2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


ஆடு, மாடுகளுக்கு கால்வாய் தொற்று நோய் பரவுவது தொடர்பில் கல்முனை மாநகரப் பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பரிசோதகர்களுக்கு தெளிவூட்டும் கருத்தரங்கு வியாழக்கிழமை (6) கல்முனை மாநகர சபையில் நடைபெற்றது.

மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் தலைமையில்  இடம்பெற்ற இந்நிகழ்வில் கால்நடைகள் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.ஜுனைட் கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

இதன்போது இப்பிரச்சினை தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் இதனைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உதவிப் பணிப்பாளரால் அறிவுரை வழங்கப்பட்டது.

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை போன்ற இடங்களில் சில மாடுகளுக்கு கால்வாய் நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X