2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் இறால் வளர்ப்பு அபிவிருத்தி

Kogilavani   / 2014 மார்ச் 07 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் தொழில்களில் ஒன்றான இறால் வளர்ப்புத்தொழிலை அபிவிருத்தி செய்து அதனூடாக வருமானத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டங்களை கடற்றொழில் அமைச்சினூடாக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை(நெக்டா) மேற்கொண்டுள்ளது.

இத்திட்டதின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இறால் பண்ணையாளர்களிடையே இறால் வளர்ப்பு மற்றும் இறால் உற்பத்தி தொடர்பான தெளிவான அறிவூட்டலை வளங்கும் ஒருநாள் பயிற்சி செயலமர்வு வியாழக்கிழமை (6) மட்டக்களப்பு பாடும்மீன் விடுதியில் தேசிய பாதுகாப்பு உயிர் வளர்ப்பு அதிகாரசபை மாவட்ட பணிப்பாளர் கே.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது.

இச்செயலமர்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள இறால் பண்ணையாளர்கள்  கலந்துகொண்டனர்.

தேசிய நீரக சேவைகள் நிலைய முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.தயாபரன், பெர்மிந்த பெர்னாண்டோ ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

சுமார் பெருமளவிலான இறால் பண்ணையாளர்கள் இப்பயிற்சியில் பங்குகொண்டர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X