2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கோழி வளர்ப்புக்கான பொருட்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 17 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வ.சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக பிரான்ஸ் அன்னை தெரேசா சமூக நல நற்பணி மன்றத்தின் மூலம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு கோழி வளர்ப்புக்கான பொருள்கள் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் பேரவையின் மட்டக்களப்பில் உள்ள மாவட்ட காரியாலயத்தில் வைத்து இவ் உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பேரவையின் பொருளாளர் ந.புவனசுந்தரம், பிரதிநிதிகளான ச.ஜெயலவன், த.சந்திரகுமார், ந.குகதர்சன், க.டிராஜ், எஸ்.காண்டீபன் மற்றும் சுயதொழில் பெறுவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து குடும்பத் தலைவியாக உள்ள ஐந்து பேருக்கு கோழி வளர்ப்புக்கான கோழிக் கூடு, ஐம்பது கோழிக் குஞ்சு மற்றும் தீண் வகைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X