2021 மே 06, வியாழக்கிழமை

மனித நுகர்வுக்கு மொருத்தமற்ற உணவுப்பொருட்கள் அழிப்பு

Kanagaraj   / 2014 மார்ச் 24 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவஅச்சுதன்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார திணைக்களத்துக்குட்பட்ட கல்லடி,நாவற்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன என்று பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.அமலபாலன் தெரிவித்தார்.

சுத்தமான உணவினை பொதுமக்கள் பெற்றுக்கொள்ளும் வகையில் சுகாதார அமைச்சு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு அமைவாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது கல்லடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை உணவுப்பொருட்களை கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் சுத்தமான உணவினை பெற்றுக்கொள்ளும் வகையில் இவ்வாறான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரு வாரங்களில் இவ்வாறு பெருமளவான உணவுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக கல்லடி,நாவற்குடா,நொச்சிமுனை போன்ற பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பொதுச்சுகாதரா பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட உணவுப்பொருட்கள் முழுவதும் அழிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .