2025 மே 08, வியாழக்கிழமை

வாகரையில் குடும்ப நல உடல் திணிவு மட்டத்தை அறியும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 30 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குடும்ப நல உடல் திணிவு மட்டத்தை அறிந்துகொள்வதற்கான வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வாகரை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 02  நாள் செயலமர்வு மட்டக்களப்பு மியானி மண்டபத்தில் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை (28)  ஆரம்பமாகி சனிக்கிழமை (29) நிறைவுபெற்ற இச்செயலமர்வு, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகியின் வழிகாட்டலிலும் தலைமையிலும் நடைபெற்றது.

இச்செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோதக்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களென 53 பேர் கலந்துகொண்டனர்.

உலக தரிசனம் எனப்படும் வேர்ள்ட்விஸன் நிறுவனத்தின் உதவியுடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குடும்பங்களின் போஷாக்கு நிலை, குடும்ப நல உடல் திணிவு மட்டம் என்பதை அறிந்துகொள்வதற்காக இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ராகுலநாயகி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவு இரண்டாம் இடத்திலுள்ளது. இதில் போஷாக்கு குறைவு ஒரு காரணியாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை மேம்படுத்துவதுடன் 'திவிநெகும' (வாழ்வெழுச்சி) திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொள்ளும் பொருட்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X