2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாற்றில் தனியார் கல்வி நிலையமொன்றில் 11வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதனை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ படம் எடுத்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து தங்களிடம் ஒப்படைத்தாக களுவாஞ்சி குடி பொலிஸார்  இன்று சனிக்கிழமை(19) தெரிவித்தனர்.

பெரியகல்லாறு 1ஆம் வட்டாரத்தில் ஆங்கில கல்வி நிலையமொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் மட்டக்களப்பு பிள்ளையாரடிப்பகுதியைச் சேர்ந்தவர் எனவும், குறித்த ஆசிரியரின் கையடக்க தொலைபேசியை கைப்பற்றியுள்ளதாகவும், இச்சம்பவம்   தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X