2025 மே 12, திங்கட்கிழமை

நட்டஈடு வழங்குமாறு கோரிக்கை

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு நேற்று(23) புதன்கிழமை கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகக் காட்டு யானைகளினால் பாதிக்கப்பட்டு பலரின் தற்காலிக, நிரந்தர வீடுகள் சேதமாக்கப்பட்டும், முற்றாக அழிக்கப்பட்டுள்ளதுடன் விவசாயச் செய்;கை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.
 
இப்பகுதி மக்கள் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து மீளக்குடியமர்ந்த  நிலையில் சிறிய கிராமங்களாகவும்  சிறிய பற்றைக் காடுகளாகவும் மாறிய  சூழலில் யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகின்றனர்.
 
இவ்வாறான நிலையில் மக்களின் இருப்பிடங்கள் அழிக்கப்பட்டு பல வருடங்களாகியும் இன்னும் வனஜீவராசிகள் திணைகளத்தினால் எவ்வித நட்டஈடுகளும் வழங்கப்படவில்லை.
 
இந்த வகையில் குறிப்பாக 2010  தொடக்கம் 2014 வரையும் சேதமாதக்கப் பட்ட வீடுகளின் விபரம் வருமாறு
மண்முனைமேற்கு வவுணதீவு பிரதேச செயாலாளர் பிரிவில் 65 வீடுகளும்,டிபோரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயாலாளர் பிரிவில் 140 வீடுகள், ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயாலாளர் பிரிவில் 23  வீடுகளும்,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயாலாளர் பிரிவில் 116 கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயாலாளர் பிரிவில் 31வீடுகளும் உட்பட மொத்தமாக 375 வீடுகள் பகுதியாகவும் முழுமையாகவும் சேதமாக்கப் பட்டுள்ளன இத்தோடு மாவட்டரீதியில் வேளாண்மைச்செய்கை, மேட்டுநிலப் பயிர்செய்கைகளில் ஈடுபட்ட 130ற்கு மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இவர்களுக்கு இதுவரை  எந்தவீத நட்டஈடுகளும் வழங்கப் படவி;ல்லை.
எனவே இவர்களுக்கு புதிதாக வீடுகளை வழங்கவேண்டும்.  அல்லது  நட்டஈடு வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இவர்களுக்கான நட்டஈடு வழங்குவதில் வனஜீவராசிகள்  ;திணைக்களம்;  பாராமுகமாக இருந்து வருகின்றது .
 
இந் நிலை தொடருமானால் மக்கள் விரக்தியடையும் நிலை ஏற்படும் இதற்கு அத்திணைக்களமே பொறுப்புக்கூற வேண்டும். இது தொடர்பான சரியான விசாரணையை அரசாங்க அதிபர் மேற்கொள்ள வேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X