2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பொருளாதாரத்தை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

Kogilavani   / 2014 மே 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எச்.ஏ.ஹுஸைன்


கிழக்கு மாகாண மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றிய முக்கிய கலந்துரையாடல் புதன்கிழமை (07) கொழும்பில் அமைந்துள்ள நிதிச்சேவை ஆணைக்குழுவில் இடம்பெற்றது.

நிதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் ஆரியரட்ண ஹேவகே தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், போரினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் புத்தெழுச்சியை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துரைத்த அமைச்சர்கள் குழாம் மேலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் பற்றி விபரித்தனர்.

இம்மக்களின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் கிழக்கில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பது தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கிழக்கின் முதலீட்டு அரங்கம் என்ற கருப் பொருளில் மாகாண அமைச்சர் நஸீர் அஹமட் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், மாகாண விவசாய மற்றும் கால்நடை, அமைச்சர் நஸீர் அஹமட், மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண கல்வி அமைச்சர் விமலவீரதிசாநாயக்க, மாகாண திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X