2025 மே 03, சனிக்கிழமை

நினைவு கூரும் நிகழ்வு

Kogilavani   / 2014 மே 16 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம்.நூர்தீன்


யுத்தத்தில் உயிரிழந்த பொலிஸாரை நினைவு கூர்ந்து அவர்களுக்க மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை  மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாகவுள்ள உயிர் நீத்த பொலிசாரின் நினைவுத்தூபிக்கு முன்னாள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான அநுரத்த ஹக்மன பண்டார, எம்.குமார உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உயிரிழந்த பொலிஸாரின் குடும்ப உறவினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது யுத்தத்தினால் உயிரிழந்த பொலிஸாரின் நினைவாக உயிர்நீத்த பொலிஸாரின் நினைவுத்தூபியில் மலர்கள் அஞ்சலிக்கா வைக்கப்பட்டது.

கடந்த யுத்தத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2598 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 498 பேர் ஊன முற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X