2025 மே 03, சனிக்கிழமை

'சவாலாக முகம் கொடுத்தல்' செயலமர்வு

Suganthini Ratnam   / 2014 மே 19 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மாவட்ட மட்டத்திலான  சமாதான சமூகப்பணி அமைப்பின் செயற்பாட்டு பிரஜைகளின் பிரச்சினைகளுக்கு 'சவாலாக முகம் கொடுத்தல்' எனும் தொனிப்பொருளின் கீழ், செயலமர்வு  சத்துருக்கொண்டானிலுள்ள சர்வோதய பயிற்சி நிலையத்தில் சனி, ஞாயிறு (17,18) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

சமாதான சமூகப்பணி அமைப்பு மற்றும்; யாழ். சமூக செயற்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டிலும் இலங்கைக்கான பிரித்தானிய கவுன்சிலின் நிதியுதவியிலும் இச்செயலமர்வு நடத்தப்பட்டது.

இச்செயலமர்வில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை  உள்ளிட்ட  மாவட்டங்களிலிருந்து  50 இற்கும்  மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமாதான சமூகப்பணி அமைப்பின்   அமைப்பின் திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.சமீர், டெனிஷ் அகதிகள் கவுன்சிலின்;  வெளிக்கள உத்தியோகத்தர் எம்.சி.அஜித்குமார் ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

செயற்பாட்டாளர்கள் எவ்வாறு சமூகத்தின் மத்தியில் மாற்றங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் சவாலாக முகம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டுமென்பது பற்றி விளக்கமளிக்கப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X