2025 மே 02, வெள்ளிக்கிழமை

தொழில்நுட்பக் கற்கைகள் பிரிவு ஆரம்பம்

Kanagaraj   / 2014 மே 24 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்கிழமை தொழில்நுட்பக் கற்கைகள் பிரிவு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய அதிபர் அ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில், பிரதிக் கல்வி அமைச்சர் மோகன்லால் கிரேரோ கலந்து கொண்டு தொழில்நுட்பக் கற்கைகள் பிரிவினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

போரதீவுப்பற்றுக் கல்விக் கோட்டத்தில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் தொழில்நுட்பக் கற்கைகள் பிரிவுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ந.வில்வரெத்தினம், கல்வியியலாளர்கள், கிராம பெரியோர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .