2025 மே 02, வெள்ளிக்கிழமை

கரடி தாக்கியதில் இருவர் காயம்

Kanagaraj   / 2014 மே 25 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

காட்டில் தேன் எடுக்கச் சென்ற இருவர் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை(24) மாலை மட்டக்களப்பு வாகரை கட்டு முறிவு காட்டில் இடம்பெற்றுள்ளது.

பால்சேனை கதிரவெளியைச் சேர்ந்தவர்களான கி.ஜெயரெட்ணம் வயது (38) க.குணலிங்கம் வயது(30) ஆகிய இருவரே கரடியின் தாக்குதலுக்குள்ளாகி கதிரவெளி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மேலும் தெரிவித்தனர்.

வழமைபோன்று தேன் எடுக்கும் தொழிலுக்கு அடர்ந்த காட்டிற்கு சென்ற வேளை குட்டி ஈன்ற கரடி ஒன்று மேற்படி நபர்களை கண்;டதும் கோபம் கொண்டு தாக்கியுள்ளது.

இதில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்;காக மரத்தில் ஏறி உயிர் தப்பியுள்ளனர். இதனால் இவர்களின் கால்கள் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை மேலும் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இதேபோன்று கரடியின் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்ற நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .