2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்களை திரட்ட நடடிவக்கை

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளிலுமுள்ள புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் ஞாயிற்றுக்கிழமை(25)  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'புனர்வாழ்வு பெற்ற போராளிகள் நிதி முதல் வாழ்வாதாரம் வரை பல்வேறு பிரச்சினைகள் அனுபவித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இந்த நடவடிக்கையினை எமது சபை ஆரம்பித்துள்ளது.

முன்னாள் போராளிகள் பலர் சுயதொழில்களில் ஈடுபடக்கூடிய வலுவுடன் இருந்தாலும் நிதிப்பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதேநேரம், அவர்கள் இன்னமும்; சமூகத்திடமிருந்து விலகியிருப்பவர்களாகவும்  பல்வேறுபட்ட வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாளாந்தம் எதிர்கொள்பவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இவர்கள் தமது சுயதொழில்களுக்காக வங்கிகளில் கடன்களைப் பெற்றுக் கொள்வதிலும், தொழில் உபகரணங்களை கொள்வனவு செய்வதிலும், சில நிறுவனங்களில் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் காணப்படுவதாக அறியமுடிகிறது.

இவ்வாறானவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற தேவைகளுக்காகவும் விபரங்களைத்திரட்டும் நடவடிக்கைகளில் சிவில் பிரஜைகள் சபை ஈடுபடுகிறது.

எனவே மாவட்டத்திலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர் தமது விபரங்களை எமது மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அலுவலகத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X