2025 மே 02, வெள்ளிக்கிழமை

பழுதடைந்த குழாய்க்கிணறுகள் திருத்தியமைப்பு

Suganthini Ratnam   / 2014 மே 26 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் இலுப்படிச்சேனைக் கிராமத்தில் பழுதடைந்த 02 குழாய்க் கிணறுகளையும் பாலர்சேனைக் கிராமத்தில் பழுதடைந்த  02  குழாய்க்கிணறுகளையும்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) திருத்திக்கொடுத்துள்ளனர்.

குழாய்க்கிணறுகள் பழுதடைந்தமை தொடர்பில் அந்தந்த கிராம அலுவலகர்கள் ஊடாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வேப்பவெட்டுவான்  கிளையிடம் இலுப்படிச்சேனை மற்றும் பாலர்சேனை கிராம மக்கள்  தெரியப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இக்குழாய்க்கிணறுகள் திருத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

மேற்படி 04 குழாய்க்கிணறுகளிலிருந்து  சுமார் 80 முதல் 100 குடும்பங்கள்  வரை குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதாக இலுப்படிச்சேனை கிராம அலுவலகர்  எஸ்.கோபு  தெரிவித்தார்.

செங்கலடி - பதுளை வீதிக் கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு  இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்துள்ளதாக  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின்  மட்டக்களப்பு கிளைத் தலைவர் ரீ.வசந்தராஜா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .