2025 மே 02, வெள்ளிக்கிழமை

யானைகளை பிடிக்க நடவடிக்கை

Kanagaraj   / 2014 மே 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார், தேவ அச்சுதன்


மக்கள் வாழும் பகுதியில் நடமாடி மக்களை அச்சுறுத்தும் காட்டு யானைகளை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இதற்கு தேவைப்படும நிதியினை உடனடியாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம், கொக்கட்டிச்சோலையிலுள்ள கருணா அம்மான் கலாசார மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, யானைகளிடமிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரிய மக்கள் பேரணியொன்று கொக்கட்டிச்சோலை பிரதான வீதியிலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் நடைபெற்ற மண்டபத்துக்கு முன்னால் சென்றது.

இதன் போது, தங்களுடைய பிரச்சினைக்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாரு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .