2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சிறுபோக அறுவடை விழா

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் கல்லடி வட்டடையில் சிறுபோக அறுவடை புதன்கிழமை(28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் இந்த சிறுபோன நெல் அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.

இந்த வைபவத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம், மற்றும் கிரான் பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவடடத்தில் இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட சிறுபோகத்தில்; 31000 ஏக்கர் செய்கை வெற்றியளித்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நவகிரி மற்றும் உன்னிச்சை, உறுகாமம், கித்துல், போன்ற நிர்ப்பாசனத்திட்டத்தின் கீழ் இந்த சிறுபோக செய்கை செய்கை பண்ணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X