2025 மே 01, வியாழக்கிழமை

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

Kanagaraj   / 2014 மே 31 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவின் கீழ் செயற்படும் பெண்கள் குழுக்களுக்கான புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வூட்டல் செயலமர்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு, மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் ஏற்பாட்டில் களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலக ஒன்றுகூடல் மண்டபத்திலேயே  வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றது.

மட்டக்களப்பு சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் கே.மதனகுமாரின் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில்,

புற்றுநோய் வராது தவிர்த்துக் கொள்வதற்கான செய்திகள், மற்றும் புற்றுநோய் சம்பந்தமான ஆபத்துக்கான காரணிகள், புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பங்கள், போன்ற பல விழிப்புணர்வூட்டல்கள் வைத்திய அதிகாரி நவலோஜீதனினால் எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வின்போது, சுகாதாரவைத்திய அதிகாரி  எஸ்.நவலோஜீதன், சர்வோதய அமைப்பின் மாவட்ட தேசோதயக் குழுவின் தலைவர் எஸ்.வேதாரணியம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராமிய மாதர் சங்க உறுப்பினர்கள்;, சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .