2025 மே 01, வியாழக்கிழமை

'நாட்டிலுள்ள ஜனாதிபதி முறைமையே இனபிரச்சினைக்கு தீர்வு காணமுடியாதுள்ளது'

Kogilavani   / 2014 ஜூன் 04 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


'நாட்டில் இருக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும், அரசியல் யாப்பிலுள்ள பிரச்சினையுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமலுள்ளது.  ஜனாதிபதி முறையை மாற்றி, அரசியல் யாப்பை மறுசீரமைப்பு  செய்தால்  இந்த பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும்' என  தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் ஹேமன் குமார தெரிவித்தார்.

மட்டக்களப்பில் செவ்வாயக்கிழமை(3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

'தமிழ் மக்களுக்கு தற்போது தீர்;வு கிடைக்கவில்லையாயின் எதிர்காலத்தில் அவர்களுக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும். தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு அரசியல் தீர்வு வழங்கப்படல் வேண்டும்.

13 க்கும் அப்பால் சென்று தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு தென்னிலங்கையிலுள்ள அரசியல் வாதிகளின் ஒப்புதலுடன் பிரச்சினைகள் தீhத்து வைக்கப்படல் வேண்டும். 

தீர்வு எனும் போது பொலிஸ் அதிகாரம் மற்றும் காணி அதிகாரம் உள்ளிட்டவைகள் வழங்கப்படல் வேண்டும்.

பிரச்சினைக்கான தீர்வை காணவேண்டுமாயின் எதிர்க்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்த நாட்டிலுள்ள தமிழ் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள்,  சிவில் அமைப்புக்களை சேர்ந்த முக்கியஸ்த்தர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் கலந்துரையாடப்பட்டு தீர்வு காணவேண்டும். 

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு சென்று அங்கு தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் அந்த நாடாளுமன்ற தெரிவக்குழுவில் நம்பிக்கையில்லை.

குறிப்பிட சிலரின் கருத்துக்களும் தனிப்பட்ட சிலரின் அபிலாசைகளுமே அந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருக்கும்.
இதனால் அந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் நம்பிக்கை கிடையாது' என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .