2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் திடீர் இராஜினாமா

Kogilavani   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் யூ.எல். முஹைதீன்பாபா திடீர் இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு செவ்வாய்க்கிழமை(3) அனுப்பி வைத்துள்ள பதவி

விலகல் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக நான் பல பதவிகளிலிருந்து பணியாற்றி கடைசியாக சம்மேளனத்தின் செயலாளராக கடந்த மூன்று வருடங்களாகச் செயற்பட்டுள்ளேன்.

இக்காலப் பகுதிகளில் என்னாலான அனைத்து அர்ப்பணிப்புக்களையும் மேற்கொண்டு இந்த சமூகத்திற்கும் இந்த ஊருக்கும் சேவையாற்றியுள்ளேன் என்பதில் திருப்தியடைகின்றேன்.

சமூகப்பணி என்பது மிகப் புனிதம்மிக்கது. எவருடனும் முரண்பட்டுக் கொண்டு இப்பணியைச் செய்ய முடியாது. அதேவேளை வீணான அவதூறுகளைச் சுமந்து கொள்ளவும் நான் விரும்பவில்லை.

இதுவரை காலமும் என் பணிக்கு ஒத்துழைப்பு நல்கிய சம்மேளன அங்கத்தவர்கள் அனைவருக்கும் ஊர் மக்களுக்கும் எனது பணிவான நன்றிகள். இன்றுடன் நான் எனது ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அங்கத்துவத்திலிருந்தும் செயலாளர் பதவிலிருந்தும் எனது சுயவிருப்பின் பேரில் விலகிக் கொள்கின்றேன்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X