2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனைவியை கத்தியால் குத்திய கணவர் தற்கொலைக்கு முயற்சி

Suganthini Ratnam   / 2014 ஜூன் 04 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,க.ருத்திரன்

குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு, தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாதுறையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (03) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொம்மாதுறை உமா மில் வீதியைச் சேர்ந்த மனைவியான  தங்கவேல் நிலாந்தினி (வயது 27),   கணவரான ஜெகன் ஜீவன் (வயது 30) ஆகியோரே கத்திக்குத்துக்குள்ளான நிலையில்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

மத்திய கிழக்கு நாட்டுக்குச் சென்று கடந்த 03 நாட்களுக்கு முன்னர் ஊருக்கு திரும்பிய கணவருக்கும் மனைவிக்குமிடையில் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், வீட்டிலிருந்த மனைவியை கத்தியால் குத்திவிட்டு பின்னர் தனக்குத்தானே கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இவர்கள் இருவரும் உடனடியாக அயலவர்களின் உதவியுடன் செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக செங்கலடி வைத்தியசாலை தகவல்கள்   தெரிவித்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X