2025 மே 02, வெள்ளிக்கிழமை

குடிநீர் உபகரணங்கள் கையளிப்பு

Kanagaraj   / 2014 ஜூன் 04 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}



ஏறாவூர் நகர முதல்வர் அலி ஸாஹிர் மௌலானாவின் வேண்டுகோளின் பேரில், தார் அல் பிர் அமைப்பினால் ஏறாவூர் பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள், நீர் இறைக்கும் பம்பி ,குழாய் கிணறுகள் என்பன நேற்று (03) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

இந் நிகழ்வின் போது அமீர் அலி வித்தியாலம், அலி ஸாஹிர் மௌலானா வித்தியாலம், பஸீர் சேகுதாவூத் வித்தியாலம், அல் அமான் வித்தியாலம், மாக்கான் மாக்கார் வித்தியாலம், அல் அஸ்ஹர் வித்தியாலம், அஹமட் பரீட் வித்தியாலம், அறபா வித்தியாலயம்,  ஆகிய எட்டுப்  பாடசாலைகளுக்கு நீர்த்தாங்கிகள், நீர் இறைக்கும் பம்பி;,குழாய் கிணறுகள் என்பன கையளிக்கப்பட்டன.

தார் அல் பிர் அமைப்பின் இணைப்பாளர் ஐ.இஸ்ஹாக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் நகர முதல்வர் அலி ஸாஹிர் மௌலானா, பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லிம், நகர சபை உறுப்பினர் ஐ.பாசித் அலி, ஓய்வு பெற்ற அதிபர் ஏ.சி.எம்.ஸஹீட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .