2025 மே 02, வெள்ளிக்கிழமை

வர்த்தக நிலையத்தில் கொள்ளை

Kanagaraj   / 2014 ஜூன் 05 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலையில் நேற்று புதன்கிழமை மாலை வர்த்தக நிலையம் ஒன்று இனந்தெரியாதவர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று(04) மாலை 6.15மணியளவில் வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த துணிகர கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காரில் வந்த இருவர் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரை மிரட்டி சுமார் 70ஆயிரம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணையினை மேற்கொண்டு வருவதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .