2025 மே 02, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் ஆணைக்குழு விசாரணையை ஆரம்பித்தது

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான் 


காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு வெள்ளிக்கிழமை(6) காலை மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.

காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தலைமையில் இந்த அமர்வு நடைபெறுகின்றது.

இந்த அமர்வில் காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்தவர்களின் சாட்சியங்களை வழங்கி வருகின்றனர். 

ஆணைக்குழுவின் விசாரணை நாளை சனிக்கிழமையும் காத்தான்குடியிலும்,  ஞாயிற்றுக்கிழமை (8) ஆரையம்பதி பிரதேச செயலக மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.
 
காத்தான்குடியிலிருந்து மாத்திரம் 163 பேரின் விண்ணப்பங்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழுவின் இணைப்பாளர் ஏ.ஹெலி தெரிவித்தார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .