2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட்டு. நகர வடிகான்கள் துப்பரவு

Suganthini Ratnam   / 2014 ஜூன் 06 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தின்; கீழ், நகர பிரதான வடிகான்கள் நேற்று வியாழக்கிழமை   துப்பரவு செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இப்பணியில், மாநகரசபையின் 200 தொழிலாளர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

வடகீழ் பருவப்பெயர்ச்சிக் கால மழையால் கிடைக்கும் நீர் வீதி மற்றும் வடிகான்களில் தங்காது  சீராக ஓட வைப்பதற்கு இவ்வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததாக ஆணையாளர் தெரிவித்தார்.

நகர பார் வீதி, புகையிரத நிலைய வீதி, மாமாங்கம் சந்திவரையும் துப்பரவுப் பணிகள் இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X