2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சீருடை அணியாத பொலிஸார் ஐவர் இடைநிறுத்தம்

Kanagaraj   / 2014 ஜூன் 07 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைக் பிடிப்பதற்காக சிவிலுடையில் நடமாடித் திரிந்த பொலிஸார் ஐவரை பணியிலிருந்து இடை நிறுத்தியுள்ளதாக  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதியொருவரைத் தேடிப்பிடிப்பதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் உதவிப் பொலிஸ் பரசோதகர் உட்பட மேலும் நான்கு பொலிஸார் அடங்களாக பொலிஸ் சோதனைக் குழுவொன்று அமைக்கப்பட்டது.

இவர்களுடைய கடமை நேரம் நள்ளிரவு 12 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த பொலிஸ் குழுவை அதிகாலை 2 மணியளவில் சோதனையிட்டபோது அவர்களில் எவரும் சீருடை தரித்து நிற்கவில்லை என்ற விடயம் தெரியவந்துள்ளது.

இது விடயமாக நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை பணியிலிருந்து இடை நிறுத்துமாறு வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்கருக்கூடாக உத்தரவிட்டார்.

அதன்படி குறித்த ஐந்து பொலிஸாரும் இன்று காலை இடை நிறுத்தம் செய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X